/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துல்லிய மின் நுகர்வு அறிய 'புளூடூத்' கருவி துல்லிய மின் நுகர்வு அறிய 'புளூடூத்' கருவி
துல்லிய மின் நுகர்வு அறிய 'புளூடூத்' கருவி
துல்லிய மின் நுகர்வு அறிய 'புளூடூத்' கருவி
துல்லிய மின் நுகர்வு அறிய 'புளூடூத்' கருவி
ADDED : ஜூலை 18, 2024 12:23 AM

திருப்பூர் : மின்நுகர்வை துல்லியமாக கணக்கிட்டு, கட்டண விவரத்தை கண்டறிய ஏதுவாக, 'புளூடூத் டிவைஸ்' மற்றும் புதிய செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டண உயர்வு ஒருபுறம் இருந்தாலும், பல்வேறு சேவை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மறைமுகமாக ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடுகட்டவும் களமிறங்கியுள்ளது.
மின் நுகர்வை துல்லியமாக கணக்கிடுவதன் மூலமாக, கூடுதல் கட்டண வருவாய் பெறும் வகையில், கணக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மின் கணக்கீட்டாளர், கண்களால் பார்த்து, கையடக்க மின் கட்டண கருவியில் பதிவு செய்து வந்தனர்; இது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இனிமேல், மீட்டர் அருகே 'புளூடூத் டிவைஸ்' வைத்து, 'மொபைல் ஆப்' வாயிலாக மின் நுகர்வை கணக்கிடும் வசதி அறி முகம் செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததால், 1000 'புளூடூத் டிவைஸ்' கொள்முதல் செய்து, மாநிலத்தில் உள்ள கணக்கீட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் கணக்கீட்டாளர்கள் கூறியதாவது:
'புளூடூத் டிவைஸ்' சிறிய பெட்டி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், காந்தம் இருப்பதால், மின் மீட்டர் அருகே வைத்ததும் ஒட்டிக்கொள்கிறது. அதன்பின், பிரத்யேக 'மொபைல் ஆப்'பில், இணைப்பு எண்ணை பதிவு செய்தால் துல்லியமான கணக்கீடு செய்யப்படும்.
'ஆட்டோ மோடு' அல்லது 'மேனுவல் மோடு'' என, இருவேறு வகையில் மின் கணக்கீடு செய்யும் வசதியும் உள்ளது. இருப்பினும், 'டிவைஸ்' மட்டும் வழங்கியுள்ளனர்; சொந்த மொபைல் போனை பயன்படுத்த வேண்டியுள்ளதால், 'டேட்டா ரீசார்ஜ்' செலவு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.