/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேகமாக நிரம்பும் அமராவதி அணை இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வேகமாக நிரம்பும் அமராவதி அணை இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வேகமாக நிரம்பும் அமராவதி அணை இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வேகமாக நிரம்பும் அமராவதி அணை இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வேகமாக நிரம்பும் அமராவதி அணை இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 08:24 PM

உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால், இரு மாவட்ட ஆற்றின் வழியோர கிராம மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த, நான்கு நாட்களாக கன மழை பெய்கிறது.
இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. விரைவில் அணை நிரம்பும் வாய்ப்புள்ளதால், அணையிலிருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும். எனவே, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள. அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 86.02 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 6,889 கனஅடி நீர்வரத்து இருந்தது.
அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படும்' என்றனர்.