ADDED : ஜூன் 02, 2024 01:29 AM
திருப்பூர்:ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா திருப்பூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு தாராபுரம் வழியாக அரசு பஸ்சில் சப்ளை செய்ய கொண்டு செல்லப்படுவது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தெரிந்தது. இதுதொடர்பாக, திண்டுக்கல் செல்ல கூடிய அரசு பஸ்களை கண்காணித்து வந்தனர். சந்தேகப்படும் விதமாக பஸ்சில் வந்த, ஐந்து பேரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் திண்டுக்கல், வேடசந்துாரை சேர்ந்த சுஜீத், 20, மது பாலன், 28, கார்த்திக், 30, அருண், 30 மற்றும் மோகன்தாஸ், 36 என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து, ஆறு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.