ADDED : ஜூன் 02, 2024 01:30 AM
அவிநாசி;அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் பரமசிவம், 42.
இவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்வதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மளிகை கடையில் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்டவை 15 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் பரமசிவத்தை கைது செய்தனர்.