ADDED : ஜன 28, 2024 01:53 AM

இஸ்ரேல் நாடு நிகோல் டிம்னா பூங்காவில், காளான் வடிவ பாறைகள் உள்ளன. அதேபோன்று இந்தியாவில், தார் பாலைவனத்திலும், தமிழகத்தில், திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த நோக்கியம் என்ற கிராமத்திலும் இவ்வகை பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொல்லியல் துறை ஆய்வாளர் தமிழ்வாணன் வேலுார் பகுதியில், ஆய்வில் ஈடுபட்டபோது, காளான் வடிவிலான அதிசய பாறையை, சிவநாதபுரம் அருகே குருமலையில் கண்டுபிடித்துள்ளார்.
காளான் வடிவிலான பாறை என்பது, கடினமான, மென்மையான, அடுக்குகளை கொண்ட பாறை. காற்றால் கடத்தி வரப்படும் மணல் துகளால் தாக்கப்பட்டு, நாளடைவில் அந்த பாறைகளின் கீழ்ப்பகுதி மணல் அரிப்பால் சேதமடைந்து, காளான் போன்ற வடிவில் அமைகின்றன.
இங்கு கண்டறியப்பட்ட காளான் வடிவிலான பாறையை, மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.