வீட்டு உணவு கேட்ட நடிகர் தர்ஷன் மனுவை தள்ளுபடி செய்தது கீழ் கோர்ட்
வீட்டு உணவு கேட்ட நடிகர் தர்ஷன் மனுவை தள்ளுபடி செய்தது கீழ் கோர்ட்
வீட்டு உணவு கேட்ட நடிகர் தர்ஷன் மனுவை தள்ளுபடி செய்தது கீழ் கோர்ட்
ADDED : ஜூலை 25, 2024 11:22 PM

பெங்களூரு: வீட்டு உணவு வழங்க அனுமதி கோரிய கன்னட நடிகர் தர்ஷன் மனுவை தள்ளுபடி செய்து கீழ் கோர்ட் உத்தரவிட்டது.
கர்நாடகாவின் முன்னணி நடிகர் தர்ஷன், இவர் தன் காதலி பவித்ரா கவுடாவுக்கு, சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவர் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததால், நடிகர் தர்ஷன், அவரை கொன்றார். ஜூன் 09-ம் தேதி கைது செய்யப்பட்டு பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தர்ஷன் சிறைக்கு வந்த போது, அவரது உடல் எடை 107 கிலோ இருந்தது. ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைந்து, 97 கிலோவுக்கு வந்துள்ளார். சிறையில் அளிக்கப்படும் உணவு, மன அழுத்தம் போன்ற காரணங்களால், அவரது எடை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டு உணவு வழங்க கோரி கடந்த 10-ம் தேதி கர்நாடகா ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணை நடைபெறும் மாஜிஸ்திரேட் கோர்ட்டை அனுகி அனுமதி பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து இந்த வழக்கு இன்று மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வீட்டு உணவு வழங்க அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.