/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ 3 பேர் சென்ற பைக்கில் கார் மோதி 2 பேர் பலி 3 பேர் சென்ற பைக்கில் கார் மோதி 2 பேர் பலி
3 பேர் சென்ற பைக்கில் கார் மோதி 2 பேர் பலி
3 பேர் சென்ற பைக்கில் கார் மோதி 2 பேர் பலி
3 பேர் சென்ற பைக்கில் கார் மோதி 2 பேர் பலி
ADDED : ஜூன் 06, 2024 12:08 AM
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்துகோட்டை கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேந்தர், 24. அதே பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல், 30, மற்றும் தயாநிதி, 18. இருவரும், சுரேந்தர் வெளியூர் செல்வதற்கு பஸ்சில் அனுப்பி வைக்க, ஒரே, 'பல்சர்' பைக்கில் மூவரும், கொத்தகோட்டை கிராமத்திலிருந்து, வாணியம்பாடி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நேற்று காலை, 6:30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மூவரும், 'ஹெல்மெட்' அணியவில்லை. அப்போது, வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் நோக்கிச் சென்ற, 'ஹோண்டா எலிவேட்' கார், சக்திவேல் உள்ளிட்ட, மூன்று பேர் சென்ற பைக் மீது மோதியது.
இதில் சுரேந்தர், தயாநிதி சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த சக்திவேல், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.