/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ பிரதமர் வீடு திட்டம் பாதியில் நிறுத்தம் 'கவனிப்பு' இல்லாததால் அலைக்கழிப்பு பிரதமர் வீடு திட்டம் பாதியில் நிறுத்தம் 'கவனிப்பு' இல்லாததால் அலைக்கழிப்பு
பிரதமர் வீடு திட்டம் பாதியில் நிறுத்தம் 'கவனிப்பு' இல்லாததால் அலைக்கழிப்பு
பிரதமர் வீடு திட்டம் பாதியில் நிறுத்தம் 'கவனிப்பு' இல்லாததால் அலைக்கழிப்பு
பிரதமர் வீடு திட்டம் பாதியில் நிறுத்தம் 'கவனிப்பு' இல்லாததால் அலைக்கழிப்பு
ADDED : ஜூன் 06, 2024 10:25 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் யூனியனுக்கு உட்பட்ட வளையாம்பட்டு பஞ்., காமராஜர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரபீக், 47. கடந்த, 2020 ஜூனில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆணை வழங்க அதிகாரிகள் லஞ்சமாக, 15,000 ரூபாய் கேட்டனர். மேலும் வீடு கட்டும் கான்ட்ராக்டர், 'அரசு தரும் பணம் போதாது; 50,000 ரூபாய் கூடுதலாக தர வேண்டும்' என ரபீக்கிடம் கேட்டனர். அதற்கு அவர், 'நான் கூலி வேலை செய்வதால், பணம் தர வசதியில்லை' என்றார். இதனால், அவருக்கு வீடு கட்டும் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் ரபீக் மனு அளித்ததால், கடந்த செப்டம்பரில் பணி துவங்கிய நிலையில், ஜன்னல், கதவு உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்தால் மட்டுமே, வீடு முழுமையாக கட்டி கொடுக்க முடியும் என கூறி, கான்ட்ராக்டர் வீடு கட்டும் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
இது குறித்து ஆலங்காயம் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அவர்களும் அவ்வாறே கூறியுள்ளனர். இது குறித்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரபீக் கோரிக்கை விடுத்துள்ளார்.