/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ஆய்வின் போது பணியில் இல்லாத அரசு விடுதி காப்பாளர் 'சஸ்பெண்ட்'ஆய்வின் போது பணியில் இல்லாத அரசு விடுதி காப்பாளர் 'சஸ்பெண்ட்'
ஆய்வின் போது பணியில் இல்லாத அரசு விடுதி காப்பாளர் 'சஸ்பெண்ட்'
ஆய்வின் போது பணியில் இல்லாத அரசு விடுதி காப்பாளர் 'சஸ்பெண்ட்'
ஆய்வின் போது பணியில் இல்லாத அரசு விடுதி காப்பாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 24, 2024 04:44 PM
ஆம்பூர் : ஆம்பூர் அருகே உள்ள, ஆதி திராவிடர் நல பள்ளி மாணவர்கள் விடுதியில், ஆர்.டி.ஓ., ஆய்வின்போது பணியில் இல்லாத, விடுதி காப்பாளரை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பத்தில், ஆதி திராவிடர் நல பள்ளி மாணவர்கள் விடுதி உள்ளது. இங்கு விடுதி காப்பாளராக வினோத்குமார், 40, என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஆம்பூர் ஆர்.டி.ஓ., அஜீதா பேகம் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது விடுதி வார்டன் பணியில் இல்லாதது தெரியவந்தது. இது குறித்த அறிக்கையை, திருப்பத்துார் கலெக்டர் தர்ப்பகராஜிற்கு அளித்தார். அதன் அடிப்படையில், பணியில் இல்லாத விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் உத்தரவிட்டார்.