/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஸ்ரீவைகுண்டம் சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர் பவனி ஸ்ரீவைகுண்டம் சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர் பவனி
ஸ்ரீவைகுண்டம் சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர் பவனி
ஸ்ரீவைகுண்டம் சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர் பவனி
ஸ்ரீவைகுண்டம் சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர் பவனி
ADDED : ஜூலை 26, 2024 12:05 AM

துாத்துக்குடி:இயேசுவின் 12 சீடர்களின் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு, 424 ஆண்டுகளுக்கு முன் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது. குருசு கோவில் என அழைக்கப்படும் அந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5:30 மணிக்கு திருப்பலியும், மாலை 6:30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், நற்கருனை ஆராதனையும் நடந்தது. பத்தாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் கூட்டுத் திருப்பலி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடந்தது.
காலை 10:00 மணிக்கு ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் எழுந்தருளினர். பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர். ஆலய வளாகத்தை சுற்றி வந்த திருத்தேரும், சப்பரமும் மதியம் 1:00 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித சந்தியாகப்பரை தரிசனம் செய்தனர்.