/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ விவசாயியை தீக்குளிக்க துாண்டியவர் கைது விவசாயியை தீக்குளிக்க துாண்டியவர் கைது
விவசாயியை தீக்குளிக்க துாண்டியவர் கைது
விவசாயியை தீக்குளிக்க துாண்டியவர் கைது
விவசாயியை தீக்குளிக்க துாண்டியவர் கைது
ADDED : ஜூலை 31, 2024 02:12 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வியாபாரி பாஸ்கர், 52. இவர், நிலப்பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் கலெக்டர் புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென, எளிதில் தீப்பற்ற கூடிய 'தின்னர்' எனும் திரவத்தை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பாஸ்கரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
இதுகுறித்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின், ஆழ்வார்த்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன், 30, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
பாஸ்கரிடம் பேசிய யூடியூபர் விக்னேஷ்வரன், 'மனு கொடுத்தால் மட்டும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். உங்கள் மீது தீ வைத்துக் கொள்ளுங்கள்' என கூறியுள்ளார். மேலும், 'அந்த நிகழ்வை அலைபேசியில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்புகிறேன். அப்போது தான் உங்களுக்கு நியாயம் கிடைக்கும்' என பாஸ்கரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
விக்னேஷ்வரை கைது செய்துள்ளோம். விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.