/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துார் கோவிலில் ஆடி கிருத்திகை ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் திருச்செந்துார் கோவிலில் ஆடி கிருத்திகை ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்செந்துார் கோவிலில் ஆடி கிருத்திகை ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்செந்துார் கோவிலில் ஆடி கிருத்திகை ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்செந்துார் கோவிலில் ஆடி கிருத்திகை ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஜூலை 31, 2024 02:22 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாரதனையும் நடந்தது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, 108 மகாதேவர் சன்னிதி முன், சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம் அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு கோயில் முதல் பிரகாரத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து முதல் பிரகாரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி புறப்பாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், பக்தர்கள் சிலர் அலகு குத்தியும், மடி பிச்சை எடுத்தும், காவடி எடுத்து வந்தும் வேண்டுதலை நிறைவேற்றினர்.