/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாத்துக்குடியில் 185 கிலோ குட்கா பறிமுதல் துாத்துக்குடியில் 185 கிலோ குட்கா பறிமுதல்
துாத்துக்குடியில் 185 கிலோ குட்கா பறிமுதல்
துாத்துக்குடியில் 185 கிலோ குட்கா பறிமுதல்
துாத்துக்குடியில் 185 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2024 01:48 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் பழைய பஞ்சாயத்து ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிராமர், 35. இவர், குட்கா வியாபாரம் செய்து வருவதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் மாரிராமர் வீட்டின் அருகே நேற்று முன்தினம் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு ஆம்னி வேனில் 185 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாரிராமரை பிடித்த தனிப்படை போலீசார் புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், 185 கிலோ குட்கா, ஆம்னி வேன் ஆகியற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான மாரிராமர் மீது ஏற்கனவே, மூன்று குட்கா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.