ADDED : ஜூலை 30, 2024 11:33 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி, பாரதிநகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம், 36. தாளமுத்துநகர் பகுதியில், 2021ல் நடந்த ஒரு மோசடி வழக்கில் தர்மலிங்கமும், அவரது மனைவி கண்ணகியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சில மாதங்களில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இது தொடர்பான வழக்கு துாத்துக்குடி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக தர்மலிங்கமும், அவரது மனைவி கண்ணகியும் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகினர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்ற தர்மலிங்கம், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.