/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பெண் பஞ்., தலைவரை ஒதுக்கி வைத்த ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது வழக்கு பெண் பஞ்., தலைவரை ஒதுக்கி வைத்த ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது வழக்கு
பெண் பஞ்., தலைவரை ஒதுக்கி வைத்த ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது வழக்கு
பெண் பஞ்., தலைவரை ஒதுக்கி வைத்த ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது வழக்கு
பெண் பஞ்., தலைவரை ஒதுக்கி வைத்த ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : ஜூலை 26, 2024 10:17 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் பஞ்., தலைவராக மறக்குடி தெருவை சேர்ந்த சோபியா, 50, இருந்து வருகிறார். இவருக்கும், புன்னக்காயில் ஊர் நல கமிட்டிக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. அங்குள்ள அரசு நிலத்தை சிலர் தனிநபர் பெயரில் பட்டா பெற்று விற்பனை செய்ய முயன்றதாக சோபியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், புன்னக்காயல் கிராமத்தில் நடக்கும் எந்தவித நன்மை, தீமைகளிலும் பஞ்., தலைவர் சோபியா கலந்து கொள்ளக்கூடாது என, தண்டோரா போட்டு அறிவித்த ஊர் நல கமிட்டி, அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஆத்துார் காவல் நிலையத்தில் சோபியா புகார் அளித்தார்.
அவர் அளித்த மனுவில், 'எந்தவித அரசு அங்கீகாரமும் இல்லாமல் ஊர் நல கமிட்டி என்ற பெயரில் குழந்தை மச்சாது என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகத்தை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சோபியா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, ஆத்துார் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தினார். ஊர் நல கமிட்டி நிர்வாகிகள் குழந்தை மச்சாது சந்திரபோஸ், இட்டோ, ஜோசப், செல்வராஜ், எடிசன், தாமஸ், அமலிசன், எலன், கில்பர்ட் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், 10க்கும் மேற்பட்டோர் மீது ஆபாசமாக பேசுதல், மத சடங்குகள் சம்பந்தமாக தொந்தரவு செய்தல் மற்றும் பாகுபாடு பார்த்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.