Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம்

துாய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம்

துாய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம்

துாய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம்

ADDED : ஜூலை 26, 2024 08:02 PM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி:துாத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற துாய பனிமய மாதா சர்ச்சின் 442வது திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

இதையடுத்து, சர்ச் முன் உள்ள கொடி மரத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி கொடியை ஏற்றினார். அப்போது, உலக அமைதியை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

பழைய துறைமுகத்தில் இழுவை கப்பலில் இருந்து சங்கொலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக தாங்கள் கொண்டு வந்திருந்த பழம், பால் உள்ளிட்டவற்றை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தனர். நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, எஸ்.பி., பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலயத்தைச் சுற்றி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. அன்றையதினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us