/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பிரபல பிராண்ட் பெயரில் போலி தீப்பெட்டிகள்: நான்கு பேர் கைது பிரபல பிராண்ட் பெயரில் போலி தீப்பெட்டிகள்: நான்கு பேர் கைது
பிரபல பிராண்ட் பெயரில் போலி தீப்பெட்டிகள்: நான்கு பேர் கைது
பிரபல பிராண்ட் பெயரில் போலி தீப்பெட்டிகள்: நான்கு பேர் கைது
பிரபல பிராண்ட் பெயரில் போலி தீப்பெட்டிகள்: நான்கு பேர் கைது
ADDED : ஜூலை 26, 2024 11:49 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி பிரதான தொழில். அங்குள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஓம் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் வினோத் பிரபாகரன் என்பவர் தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகிறார்.
சான்று பெற்ற 'டிரேட் மார்க்' பிராண்டாக அவர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில், அவரது நிறுவனத்தின் டிரேட் மார்க் பிராண்ட் போல, போலியாக தீப்பெட்டி உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதுகுறித்து, வினோத் பிரபாகரன் திருநெல்வேலியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய அதிகாரிகள், டிரேட் மார்க் பிராண்டினை மோசடியாக பயன்படுத்தி தீப்பெட்டி உற்பத்தி செய்தது தொடர்பாக சரவணன், வெங்கடேஷ், குட்டி மற்றும் போலியாக தீப்பெட்டி லேபிள் அடித்து கொடுத்த ஹரிஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
தீப்பெட்டி தொழில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், அதிகம் விற்பனையாகும் பிராண்ட்கள் மாதிரி போலியாக தீப்பெட்டி உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் கும்பல்கள் கோவில்பட்டியில் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.