/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி நான்கு வழிச்சாலை பணி விறுவிறு ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி நான்கு வழிச்சாலை பணி விறுவிறு
ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி நான்கு வழிச்சாலை பணி விறுவிறு
ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி நான்கு வழிச்சாலை பணி விறுவிறு
ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி நான்கு வழிச்சாலை பணி விறுவிறு
ADDED : ஜூன் 02, 2025 03:36 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, மைலாப்பூர், ஒதப்பை, பூண்டி, புல்லரம்பாக்கம் மற்றும் இணைப்பு சாலை வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இருவழிச் சாலையாக உள்ள இந்த மார்க்கத்தில், சில இடங்களில் சாலை குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை தவிர்க்க இந்த மார்க்கத்தில் நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவெடுத்து, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து பெரிஞ்சேரி வரை, 2.6 கி.மீ., துாரம் நான்குவழிச் சாலையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 30 மீட்டர் அகலத்தில் மைய தடுப்புடன் சாலை அமைக்கும் பணி ஏப்., மாதம் துவங்கியது. இந்த பணிக்காக, 50க்கும் மேற்பட்ட மரங்கள், 100க்கும் மேற்பட்ட மிகன்கம்பங்கள் அகற்றப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டன. சாலை விரிவாக்கம் முடிந்து, ஜல்லிக்கற்கள் கொட்டி சமன் செய்யும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.