/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சேதமான தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை சேதமான தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை
சேதமான தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை
சேதமான தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை
சேதமான தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 02, 2025 03:37 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மடுகூரில் இருந்து வெள்ளாத்துார் வழியாக ஆர்.கே.பேட்டைக்கும், ஆதிவராகபுரம் வழியாக சோளிங்கருக்கும் தார் சாலை வசதி உள்ளது.
இந்த இரண்டு மார்க்கத்திலும், ஓடை ஒன்று குறுக்கிடுகிறது. ஒடையின் மீது கட்டப்பட்டருந்த பாலங்கள், கடந்த 2021ல் பெய்த கனமழையின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில், வெள்ளாத்துார் மார்க்கத்தில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ஆதிவராகபுரம் மார்க்கத்தில் உடைந்த பாலம், தற்காலிகமாக கல் மற்றும் மண் கொட்டி சீரமைக்கப்பட்டுள்ளது.
வரும் பருவ மழைக்கு முன்னதாக, ஆதிவராகபுரம் மார்க்கத்தில் உள்ள தரைப்பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.