/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டூ - வீலர்கள் மோதல்: மேலும் ஒருவர் பலி டூ - வீலர்கள் மோதல்: மேலும் ஒருவர் பலி
டூ - வீலர்கள் மோதல்: மேலும் ஒருவர் பலி
டூ - வீலர்கள் மோதல்: மேலும் ஒருவர் பலி
டூ - வீலர்கள் மோதல்: மேலும் ஒருவர் பலி
ADDED : செப் 11, 2025 09:53 PM
திருத்தணி:இரு பைக்குகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் நகரி அடுத்த தடுக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ், 27. திருத்தணி அடுத்த மங்காபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 21. இருவரும், கடந்த 7ம் தேதி 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மத்துார் பேருந்து நிறுத்தம் அருகே மற்றொரு 'ஹீரோ பேஷன் புரோ' பைக் அதிவேகமாக வந்து நேருக்குநேர் மோதியது.
இதில், தினேஷ் மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த மத்துாரைச் சேர்ந்த கோவிந்தன், 27, ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த ஆகாஷ், 21, தடுக்குப்பேட்டை சேர்ந்த முனிரத்தினம், 66, ஆகிய இருவரும், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.