ADDED : செப் 11, 2025 09:54 PM
ஆர்.கே.பேட்டை:சாலை வசதி மற்றும் மலைப்பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க கோரி, கொண்டாபுரம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரத்தில் உள்ள சமத்துவபுரம் கூட்டுச்சாலை வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், சுடுகாட்டிற்கு பாதை வசதி, மலைப்பகுதியில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதன்பின், மாலையில் விடுவித்தனர்.