/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விஷ குளவி கொட்டி 4 பேர் காயம் சின்னகளக்காட்டூர் மக்கள் அச்சம் விஷ குளவி கொட்டி 4 பேர் காயம் சின்னகளக்காட்டூர் மக்கள் அச்சம்
விஷ குளவி கொட்டி 4 பேர் காயம் சின்னகளக்காட்டூர் மக்கள் அச்சம்
விஷ குளவி கொட்டி 4 பேர் காயம் சின்னகளக்காட்டூர் மக்கள் அச்சம்
விஷ குளவி கொட்டி 4 பேர் காயம் சின்னகளக்காட்டூர் மக்கள் அச்சம்
ADDED : செப் 11, 2025 09:53 PM
திருவாலங்காடு:சின்னகளக்காட்டூரில் விஷ குளவி கொட்டி நான்கு பேர் காயமடைந்தனர். விஷ குளவிகளால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர். இங்குள்ள பள்ளத்தெருவில் குடியிருப்பு அருகே பனைமரம் உள்ளது.
இந்த மரத்தில் மூன்று மாதமாக விஷ குளவி கூடு கட்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை திடீரென விஷக்குளவி, அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 70, நந்தினி, 20, முருகன், 27, என, மூவரை கொட்டியது.
மேலும், இரவு அவ்வழியாக சென்ற ஒருவரையும் கொட்டியது. உடனடியாக, திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
விஷக் குளவி கொட்டி நான்கு பேர் காயமடைந்ததால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், விஷ குளவி கூட்டை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.