/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நந்தி ஆற்றில் துார்வாரும் பணி மும்மரம் நந்தி ஆற்றில் துார்வாரும் பணி மும்மரம்
நந்தி ஆற்றில் துார்வாரும் பணி மும்மரம்
நந்தி ஆற்றில் துார்வாரும் பணி மும்மரம்
நந்தி ஆற்றில் துார்வாரும் பணி மும்மரம்
ADDED : செப் 12, 2025 02:38 AM

திருத்தணி:நந்தி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை, நீர்வளத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் இருந்து உருவாகும் நந்தி ஆறு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் குடிகுண்டா, ராமகிருஷ்ணாபுரம், கோரமங்கலம், திருத்தணி வழியாக, திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
திருத்தணி ஆசிரியர்நகர் மற்றும் முருகப்பநகர் ஆகிய பகுதிகளில், நந்தியாற்றின் நீர்ப்பிடிப்பு அதிகமாக இருக்கும். இந்நிலையில், இப்பகுதியில் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
அப்போது, முட்செடிகளால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், திருத்தணி நீர்வளத்துறையினர், முருகப்பநகர் பகுதியில் உள்ள நந்தியாற்றில் துார்வாரும் பணியை மேற்கொண்டு உள்ளனர்.
திருத்தணி நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது:
நந்தியாற்றில் அதிகளவில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 200 மீட்டருக்கு முட்செடிகளை அகற்றி, தண்ணீர் எளிதாக செல்லும் வகையில், பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.