/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழலை நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு முகாம் கழலை நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு முகாம்
கழலை நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு முகாம்
கழலை நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு முகாம்
கழலை நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு முகாம்
ADDED : செப் 12, 2025 02:35 AM

திருத்தணி:திருத்தணி கோட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணி கோட்டத்தில் பசு, எருமை மற்றும் காளை என, மொத்தம் 84,560 கால்நடைகள் உள்ளன. கால்நடைகள், தோல் கழலை நோயால் பாதிக்கப்படுகிறது.
இந்நோய், பசு மாடுகளுக்கு கொசு, ஈ, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக பரவுகிறது.
நோய் தாக்கத்தால் பால் உற்பத்தி குறைதல், சினை பிடிப்பதில் பாதிப்பு, காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படைதல், கருச்சிதைவு மற்றும் மடி நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்நோய் தொற்று பரவுவதை தடுக்க தடுப்பூசி அவசியம் கால்நடைகளுக்கு போட வேண்டும்.
இதுகுறித்து, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் கிரிதரன் கூறியதாவது:
திருத்தணி கோட்டத்தில், 57,600 பசு மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. நேற்று வரை, 2,300 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
மீதமுள்ள கால்நடைகளுக்கு, வரும் 30ம் தேதிக்குள் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்படும். மருத்துவ குழுவினர் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் சென்று தடுப்பூசி போடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.