/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரியில் இருந்து விழுந்த அரிசி மூட்டைகளால் நெரிசல் லாரியில் இருந்து விழுந்த அரிசி மூட்டைகளால் நெரிசல்
லாரியில் இருந்து விழுந்த அரிசி மூட்டைகளால் நெரிசல்
லாரியில் இருந்து விழுந்த அரிசி மூட்டைகளால் நெரிசல்
லாரியில் இருந்து விழுந்த அரிசி மூட்டைகளால் நெரிசல்
ADDED : செப் 12, 2025 02:39 AM

ஆர்.கே.பேட்டை:ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றிச் சென்ற லாரி, வேகத்தடையை கடந்த போது, லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்.கே.பேட்டை தாலுகா உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கு வங்கனுாரில் உள்ளது. இந்த கிடங்கில் இருந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நேற்று, இந்த கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகளுடன், ஆர்.கே.பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, திருத்தணி சாலையில் உள்ள வேகத்தடையை கடந்த போது, அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்தன.
சிறிது நேரத்தில், அரிசி மூட்டைகள் மீண்டும் லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றது. இதனால், திருத்தணி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.