/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நாய் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு நாய் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
நாய் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
நாய் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
நாய் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 19, 2025 06:52 PM
திருவாலங்காடு:கடம்பத்துார் ஒன்றியம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வசந்த், 30. இவர் கடந்த 8ம் தேதி திருவாலங்காடு- பேரம்பாக்கம் சாலை வழியாக டி.வி.எஸ்., ஜூபிடர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ஒரத்துார் பாலம் அருகே வந்த போது நாய் குறுக்கே வந்ததில் அதன்மீது மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை மீட்ட அவ்வழியே சென்றவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அங்கு உயிரிழந்தார்.
திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.