ADDED : ஜூன் 19, 2025 06:53 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தக்கோலம்--- --- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலை அருகில் பள்ளி அமைந்துள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாலையை கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
அதிவேகமாக வரும் வாகனங்களால் மாணவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, மாநில நெடுஞ்சாலை துறைக்கு பலமுறை பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைத்தும், இதுவரை வேகத்தடை அமைக்கப்படவில்லை. மாணவ- மாணவியரின் பாதுகாப்பை கருதி, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அப்பகுதி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.