Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரி வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை

பொன்னேரி வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை

பொன்னேரி வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை

பொன்னேரி வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை

ADDED : மே 29, 2025 07:47 PM


Google News
பொன்னேரி:பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்க வேண்டும் என, பொன்னேரி தொகுதி காங்., எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் மனு அளித்து உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர்நீதிமன்றம் - காட்டுப்பள்ளி, பொன்னேரியில் இருந்து மெதுார், கோளூர், தேவம்பட்டு வழியாக சுண்ணாம்புகுளம், பொன்னேரியில் இருந்து தேவராஞ்சேரி, ஏறுசிவன், மடிமை கண்டிகை, வஞ்சிவாக்கம் வழியாக பழவேற்காடு.

சென்னை வெளிவட்ட சாலை வழியாக மீஞ்சூர் - கிளாம்பாக்கம், சென்னை திருவொற்றியூரில் இருந்து, விச்சூர், வெள்ளிவாயல் ஆகிய கிராமங்கள் மற்றும் பொன்னேரி - மீஞ்சூர் மற்றும் பழவேற்காடு - மீஞ்சூர் வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க வேணடும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us