/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல் திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்
திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்
திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்
திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்
ADDED : மே 29, 2025 07:46 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக திருத்தணி அண்ணா பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லம், மலைப்பாதை எதிரே கார்த்திகேயன் இல்லம் மற்றும் மலைப்படிகள் ஏறும் பகுதியில் திருக்குளம் அருகே சரவணபொய்கை குடில் என மூன்று இடங்களில் விடுதிகள் கட்டி, பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் விடப்படுகிறது.
இந்நிலையில் சமீப காலமாக தேவஸ்தான விடுதிகளில் சமூக விரோதிகள் புகுந்து, கோவில் ஊழியர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
கடந்த இரு நாட்களுக்கு முன், சரவணபொய்கை விடுதியில், பணியில் இருந்த கோவில் ஊழியர் பாலசுப்பிரமணி மீது, மூன்று இளைஞர்கள் மதுபாதையில் வந்து, இரும்பு ராடால் தாக்கி விட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கோவில் இணை ஆணையர் ரமணி, திருத்தணி போலீசாரிடம், முருகன் கோவிலுக்கு சொந்தமான மூன்று விடுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, கூறி மனு அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.