/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மதுக்கூடமான ஜெ.ஜெ.நகர் போலீஸ் ரோந்து அவசியம் மதுக்கூடமான ஜெ.ஜெ.நகர் போலீஸ் ரோந்து அவசியம்
மதுக்கூடமான ஜெ.ஜெ.நகர் போலீஸ் ரோந்து அவசியம்
மதுக்கூடமான ஜெ.ஜெ.நகர் போலீஸ் ரோந்து அவசியம்
மதுக்கூடமான ஜெ.ஜெ.நகர் போலீஸ் ரோந்து அவசியம்
ADDED : ஜூன் 07, 2025 10:44 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கற்பக விநாயகர், முத்தழகு நகர், ஆனந்தம் கார்டன், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இக்குடியிருப்புவாசிகள் ஜெ.ஜெ.நகர் வழியாக தனியார் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும், ஊத்துக்கோட்டை, பாண்டூர் வழியாக செல்வோர், ஐ.சி.எம்.ஆர்., பகுதிக்கு செல்ல, இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஜெ.ஜெ.நகரில் இருந்து ஐ.சி.எம்.ஆர்., வரை செல்லும் சாலையோரம், 'குடி'மகன்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர். தாங்கள் பயன்படுத்திய மதுபாட்டில்களை சாலையிலேயே வீசி செல்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் பகுதிவாசிகள் முகம்சுளித்தபடி செல்கின்றனர். மேலும், கண்ணாடி பாட்டில் உடைந்து, இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகளை பதம்பார்க்கிறது.
எனவே, திருவள்ளூர் டவுன் போலீசார், ஜெ.ஜெ.நகர் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.