/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்விளக்கு இல்லாததால் சமூக விரோதிகள் அட்டூழியம் மின்விளக்கு இல்லாததால் சமூக விரோதிகள் அட்டூழியம்
மின்விளக்கு இல்லாததால் சமூக விரோதிகள் அட்டூழியம்
மின்விளக்கு இல்லாததால் சமூக விரோதிகள் அட்டூழியம்
மின்விளக்கு இல்லாததால் சமூக விரோதிகள் அட்டூழியம்
ADDED : ஜூன் 07, 2025 10:44 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல் மின்நிலையங்கள், எரிவாயு முனையங்கள், துறைமுகங்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனங்களில் சென்னை எண்ணுார், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள், அங்குள்ள எண்ணுார் - வடசென்னை அனல் மின்நிலைய சாலை வழியாக பயணிக்கின்றனர்.
இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் தொழிலாளர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும், இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர்.
இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன. பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருந்தும், இச்சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் இருப்பது, தொழிலாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் வடசென்னை அனல் மின்நிலைய சாலையில் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.