/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விவசாய நிலங்களில் பூச்சிகள் அதிகரிப்பு பூச்சியியல் துறை ஆலோசனை வழங்குமா? விவசாய நிலங்களில் பூச்சிகள் அதிகரிப்பு பூச்சியியல் துறை ஆலோசனை வழங்குமா?
விவசாய நிலங்களில் பூச்சிகள் அதிகரிப்பு பூச்சியியல் துறை ஆலோசனை வழங்குமா?
விவசாய நிலங்களில் பூச்சிகள் அதிகரிப்பு பூச்சியியல் துறை ஆலோசனை வழங்குமா?
விவசாய நிலங்களில் பூச்சிகள் அதிகரிப்பு பூச்சியியல் துறை ஆலோசனை வழங்குமா?
ADDED : ஜூன் 07, 2025 10:41 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், 10,000 ஏக்கர் பரப்பளவில் மூன்று போகம் நெல் பயிரிடப்படுகிறது.
இதுதவிர காய்கறிகள், பூ வகைகள், சிறுதானியங்கள் என, 2,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.
தற்போது, விவசாய நிலங்களில் குருத்து தண்டு துளைப்பான், சாறு உறுஞ்சி பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் தொல்லை அதிகரித்து இருப்பதால், மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன உரங்களை பயன்படுத்துவது மற்றும் பூச்சி மருந்துகளை தெளித்து வருகின்றனர். உரங்கள் வாங்கியே தங்களது பொருளாதாரம் பாதிப்பை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடு விவசாயிகள் கூறியதாவது:
விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் சூரிய ஒளி விளக்கு பொறி, மஞ்சள் வண்ண அட்டை, நீல நிற அட்டை உள்ளிட்டவை, வேளாண் துறை சார்பில் வழங்க வேண்டும்.
அதன் வாயிலாக விவசாய நிலங்களில் ஊடுருவும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பூச்சியியல் துறை வாயிலாக திருவாலங்காடு ஒன்றிய விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.