/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தொழிற்சாலை பஸ் மோதி வடமாநில வாலிபர்கள் பலிதொழிற்சாலை பஸ் மோதி வடமாநில வாலிபர்கள் பலி
தொழிற்சாலை பஸ் மோதி வடமாநில வாலிபர்கள் பலி
தொழிற்சாலை பஸ் மோதி வடமாநில வாலிபர்கள் பலி
தொழிற்சாலை பஸ் மோதி வடமாநில வாலிபர்கள் பலி
ADDED : மார் 12, 2025 03:07 AM
பூந்தமல்லி:மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாபி காஜ்டி, 30, டபாஸ், 24. இருவரும், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் கிராமத்தில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, சென்னை- - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் சாலையை கடந்து சென்றனர்.
அப்போது, அவ்வழியே ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து, ஊழியர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ், அவர்கள் மீது மோதியது. இதில் அடிபட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர்கள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் சங்கரை, 48, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.