/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையோரம் இயங்கும் வாரச்சந்தை பூந்தமல்லியில் தொடரும் நெரிசல் சாலையோரம் இயங்கும் வாரச்சந்தை பூந்தமல்லியில் தொடரும் நெரிசல்
சாலையோரம் இயங்கும் வாரச்சந்தை பூந்தமல்லியில் தொடரும் நெரிசல்
சாலையோரம் இயங்கும் வாரச்சந்தை பூந்தமல்லியில் தொடரும் நெரிசல்
சாலையோரம் இயங்கும் வாரச்சந்தை பூந்தமல்லியில் தொடரும் நெரிசல்
ADDED : மார் 12, 2025 03:09 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இருந்து வேலப்பன்சாவடி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையோரம் சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம் ஊராட்சி பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
மக்கள் பெருக்கத்தால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, இந்த பகுதியில் அதிக அளவில் வணிக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நெடுஞ்சாலையில், 2 கி.மீ., துாரத்திற்கு வியாழக்கிழமைதோறும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சந்தை செயல்படுகிறது.
காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால், இங்கு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சாலையோரம் கடைகள் அமைத்து சந்தை இயங்கும் நிலையில், இங்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால் நெரிசல் அதிகரிக்கிறது.
மேலும், பொருட்களை வாங்க வருவோர், சாலையின் எதிர் திசையில் வாகனத்தை இயக்குவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலையோரம் சந்தை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.