/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திறப்பு விழா காணாமலே பாழான சுகாதார வளாகம் திறப்பு விழா காணாமலே பாழான சுகாதார வளாகம்
திறப்பு விழா காணாமலே பாழான சுகாதார வளாகம்
திறப்பு விழா காணாமலே பாழான சுகாதார வளாகம்
திறப்பு விழா காணாமலே பாழான சுகாதார வளாகம்
ADDED : மார் 12, 2025 03:25 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சி, அண்ணனுாரில், 2010ம் ஆண்டில், தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில், அடிப்படை வசதியான கழிப்பறை இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
ஆய்வின் அடிப்படையில், பெரியார் நகரில் அங்கன்வாடி மையம் மற்றும் பொதுக் கழிப்பறை கட்ட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, 2014 - 15ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
அதன்பின் நடந்த ஆட்சி மாற்றத்தால், சுகாதார வளாகத்தை அப்போதைய ஆவடி பெருநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது, மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல், புதிய சுகாதார மையம் கட்டுவதில் குறியாக உள்ளனர்.
இதனால், சுகாதார வளாக கட்டடம் போதிய பராமரிப்பின்றி, கருவேல மரங்கள் வளர்ந்து செடி கொடிகள் வளர்ந்து காட்சியளிக்கிறது. அதை பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர் மது அருந்தும் கூடமாக மாற்றி உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், கடந்த 11 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பாழாகி வரும் சுகாதார வளாகத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.