/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் திருத்தணி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்
திருத்தணி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்
திருத்தணி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்
திருத்தணி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்
ADDED : மார் 12, 2025 02:13 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவ விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உத்சவர் முருகப்பெருமான் கேடயம், பல்லாக்கு, அன்னம், வெள்ளிமயில், யானை, பூதம், சிம்மம், சந்திரபிரபை போன்ற பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் இரவு நேரத்தில் மாடவீதியில் உலா வந்தார்.
கடந்த 9ம் தேதி இரவு தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு உத்சவர் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் உலா வந்தார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, உத்சவர் முருகப் பெருமானுக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை இரவு கொடி இறக்கத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா நிறைவு பெறுகிறது.