/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குழாய் பதிப்பு பணிகளால் பெரும்பேடு சாலை சேதம் குழாய் பதிப்பு பணிகளால் பெரும்பேடு சாலை சேதம்
குழாய் பதிப்பு பணிகளால் பெரும்பேடு சாலை சேதம்
குழாய் பதிப்பு பணிகளால் பெரும்பேடு சாலை சேதம்
குழாய் பதிப்பு பணிகளால் பெரும்பேடு சாலை சேதம்
ADDED : செப் 12, 2025 02:31 AM

பொன்னேரி:கழிவுநீர் குழாய் பதிப்பு பணிகளுக்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, அவை சீரமைக்கப்படாமல் இருப்பதால், பொன்னேரி - பெரும்பேடு வழித்தடத்தில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பொன்னேரி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, ஆரணி ஆற்றில் விட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, சின்னகாவணம் பகுதியில் இருந்து லட்சுமிபுரம் அணைக்கட்டு வரை, கடந்த மாதம் குழாய் பதிப்பு பணிகள் நடந்தன.
இதற்காக, சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டி, அதில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டன. இப்பணிகள் முடிந்த நிலையில், தோண்டப்பட்ட இடங்களில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம்அடைகின்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், செங்கல்சூளைக்கு சென்று வரும் லாரிகள் உள்ளிட்டவை சாலையோரங்களில் பயணிக்கும் போது, மண்ணில் சிக்கி சிரமத்திற்கு உள்ளாகின்றன.
எனவே, குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் சாலை யை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.