/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி: குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி: குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி: குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி: குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி: குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : செப் 12, 2025 02:33 AM

மீஞ்சூர்:குளத்தின் அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மீஞ்சூர் ஒன்றியம், நெய்தவாயல் ஊராட்சிக்கு உட்பட்ட மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இங்கு, புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள குளத்தின் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அங்கன்வாடி மையத் தை சுற்றிலும், செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், குழந்தைகள் குளத்தின் அருகே செல்லும்போது அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கட்டடத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன.
எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், செடிகளை அகற்றவும் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.