/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு பெற அறிவுறுத்தல் வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு பெற அறிவுறுத்தல்
வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு பெற அறிவுறுத்தல்
வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு பெற அறிவுறுத்தல்
வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு பெற அறிவுறுத்தல்
ADDED : மே 22, 2025 01:58 AM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகளில், 14,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 3,000க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களும் உள்ளன.
நகராட்சியில் குடிநீர் பிரச்னை தீர்க்க, 110 கோடி ரூபாயில் திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் முடித்து, 21 வார்டுகளிலும் குடிநீர் குழாய்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதில், 2,500 குடியிருப்பு வாசிகள் மட்டுமேநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் இணைப்பு பெறாமல்உள்ளனர்.
தற்போது, கூட்டு குடிநீர் குழாய் வாயிலாக தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, 10,300 வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு,புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிர மணியம் கூறியதாவது:
நகராட்சியில் பெரும் பாலானோர் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு பெறாமல் உள்ளனர்.
இவர்களுக்கு, தெரு குழாய் வாயிலாக வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, முன்வைப்பு தொகை செலுத்தி குடிநீர் இணைப்பு பெறலாம்.
ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் கூடுதல் தொகை செலுத்தினால் தொடர்ந்து குடிநீர் பெறலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு முன்வைப்பு தொகையாக 7,000ரூபாயும், குழாய்அமைத்தல் செலவு, 1,500 ரூபாய் என, மொத்தம் 8,500 ரூபாய் செலுத்த வேண்டும்.முன்னதாக, வீட்டுக்கு சொத்து வரி செலுத்தியிருக்க வேண்டும்.
ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், கூடுதலாக 2,000 ரூபாய் வைப்புத் தொகை மற்றும்குழாய் அமைத்தல் செலவு, 1,500 ரூபாய் என, மொத்தம் 3,500 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதேபோல், வணிக வளாகங்களுக்கு புதிய குடிநீர் இணைப்புபெற, முன்வைப்பு தொகை 15,000ரூபாயும், குழாய்அமைத்தல் செலவு, 1,500 ரூபாய் என, மொத்தம் 16,500 ரூபாய் செலுத்தி ரசீது பெற வேண்டும்.