/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஓ.எஸ்.ஆர்., நிலம் முறைகேடாக விற்பனை பட்டாக்களை ரத்து செய்ய ஜமாபந்தியில் மனு ஓ.எஸ்.ஆர்., நிலம் முறைகேடாக விற்பனை பட்டாக்களை ரத்து செய்ய ஜமாபந்தியில் மனு
ஓ.எஸ்.ஆர்., நிலம் முறைகேடாக விற்பனை பட்டாக்களை ரத்து செய்ய ஜமாபந்தியில் மனு
ஓ.எஸ்.ஆர்., நிலம் முறைகேடாக விற்பனை பட்டாக்களை ரத்து செய்ய ஜமாபந்தியில் மனு
ஓ.எஸ்.ஆர்., நிலம் முறைகேடாக விற்பனை பட்டாக்களை ரத்து செய்ய ஜமாபந்தியில் மனு
ADDED : மே 22, 2025 01:57 AM
திருவள்ளூர்:தண்ணீர்குளம் கிராமத்தில் வீட்டுமனை பிரிவுகளில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட, 'ஓ.எஸ்.ஆர்.,' நிலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யக்கோரி, ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில், தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த அமுதவாணன் என்பவர், நேற்று அளித்துள்ள மனு:
திருவள்ளூர் வட்டம், தண்ணீர்குளம் ஊராட்சியில், டி.டி.சி.பி., அனுமதி பெற்று, நெ.து.சுந்தரவடிவேல் நகர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில், பூங்கா பயன்பாட்டிற்கு என, 'ஓ.எஸ்.ஆர்.,' நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, டி.டி.சி.பி., எண் - 291/2009, 377/2009, 109/2010, 243/201 மற்றும் 28/2011 ஆகிய ஐந்து மனை பிரிவுகள், ஊராட்சிக்கு தானபத்திரப்பதிவு செய்து தரப்பட்டுள்ளது.
மேற்கண்ட பூங்காவிற்கான ஐந்து இடங்களும், முறைகேடாக தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதற்கு வருவாய் துறையினரும் பட்டா வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து, கலெக்டர், பத்திரப்பதிவு துறை அலுவலர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த பதிலில், பூங்கா இடம் விற்பனை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
எனவே, தண்ணீர் குளம் கிராம ஊராட்சிக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா இடத்தை முறைகேடாக விற்பனை செய்து, வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற ஜமாபந்தி அதிகாரிகள், 'உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர்.