/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வளரிளம் ஆண், பெண்களுக்கு 'ஹாப்பி பீரியட்ஸ்' சிறப்பு பயிற்சி வளரிளம் ஆண், பெண்களுக்கு 'ஹாப்பி பீரியட்ஸ்' சிறப்பு பயிற்சி
வளரிளம் ஆண், பெண்களுக்கு 'ஹாப்பி பீரியட்ஸ்' சிறப்பு பயிற்சி
வளரிளம் ஆண், பெண்களுக்கு 'ஹாப்பி பீரியட்ஸ்' சிறப்பு பயிற்சி
வளரிளம் ஆண், பெண்களுக்கு 'ஹாப்பி பீரியட்ஸ்' சிறப்பு பயிற்சி
ADDED : மே 22, 2025 01:59 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் வளரிளம், ஆண், பெண்களுக்கு 'ஹாப்பி பீரியட்ஸ்' என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கலெக்டர் பிரதாப் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
வளரிளம் பருவத்தில் ஆண், பெண்களுக்கு அதிகப்படியான மாற்றம் ஏற்படும்.
அந்த மாற்றத்தை சரியான வழிமுறைகளில் கொண்டு செல்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர் வாயிலாக ஒரு நாள் பயிற்சி வழங்கப் படுகிறது.
அதில், காப்பகத்தில் இருக்கும் ஆண், பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. ஆண், பெண்களுக்கு வளரிளம் பருவத்தில் ஆரோக்கியம் குறித்து அறிவுரை வழங்கப்படும்.
தற்போது, பல்வேறு துறையில் பெண்கள் முன்னேறி கொண்டிருக்கும் காலகட்டத்தில், நீங்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்ந்து, வளரிளம்பருவ ஆரோக்கியம் குறித்த கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.