/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வரமூர்த்தீஸ்வர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை வரமூர்த்தீஸ்வர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
வரமூர்த்தீஸ்வர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
வரமூர்த்தீஸ்வர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
வரமூர்த்தீஸ்வர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
ADDED : ஜூன் 07, 2025 02:36 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அரியத்துறை கிராமத்தில், பழமை வாய்ந்த மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, அன்ன வாகனம், அதிகாரி நந்தி, சிம்ம வாகனம், நாக வாகனம், திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட உற்சவங்களும், தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன.
விழாவின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. காலை 7:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர் மாடவீதிகள் வழியாக வலம் வந்தது. தேரில் வரமூர்த்தீஸ்வரர் உற்சவ பெருமான் வீற்றிருந்தார். பகர்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து, நெஞ்சுருக சிவபெருமானை வணங்கினர்.