/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலை மைய தடுப்பில் கட்டப்பட்ட கொடி கம்பங்கள் நெடுஞ்சாலை மைய தடுப்பில் கட்டப்பட்ட கொடி கம்பங்கள்
நெடுஞ்சாலை மைய தடுப்பில் கட்டப்பட்ட கொடி கம்பங்கள்
நெடுஞ்சாலை மைய தடுப்பில் கட்டப்பட்ட கொடி கம்பங்கள்
நெடுஞ்சாலை மைய தடுப்பில் கட்டப்பட்ட கொடி கம்பங்கள்
ADDED : ஜூன் 07, 2025 02:32 AM

கடம்பத்துார்,:சென்னை பள்ளிக்கரணையில், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், சுபஸ்ரீ, 23, என்ற இளம்பெண் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலையில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்தது.
தற்போது, திருமழிசை - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை மைய தடுப்பு பகுதியில், கொடி கம்பங்கள் மற்றும் சாலையோரம் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அரசியல் விழாக்கள் மட்டுமல்லாது, திருமணம், பிறந்த நாள் விழா, பாராட்டு விழா, கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.
இதற்கு, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நெடுஞ்சாலையில் பேனர், கொடி கம்பங்கள் வைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, விளம்பர பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.