/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வீடு புகுந்து தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு வீடு புகுந்து தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
வீடு புகுந்து தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
வீடு புகுந்து தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
வீடு புகுந்து தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 13, 2025 07:59 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமிவிலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்தாஸ், 44. இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான், 40, என்பவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 9ம் தேதி ஜான், கவின், 19, மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரும், பிரேம்தாஸ் வீடு புகுந்து, அவருடைய அண்ணன் மற்றும் தாயை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பிரேம்தாஸ், திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.