/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஏரியில் வரம்பு மீறி மண் எடுப்பு புகாருக்கு நடவடிக்கை இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு ஏரியில் வரம்பு மீறி மண் எடுப்பு புகாருக்கு நடவடிக்கை இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
ஏரியில் வரம்பு மீறி மண் எடுப்பு புகாருக்கு நடவடிக்கை இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
ஏரியில் வரம்பு மீறி மண் எடுப்பு புகாருக்கு நடவடிக்கை இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
ஏரியில் வரம்பு மீறி மண் எடுப்பு புகாருக்கு நடவடிக்கை இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 13, 2025 08:05 PM
திருவாலங்காடு:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
திருவாலங்காடு பகுதியில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனமயமாக்க வேண்டும். திருவாலங்காடு ஒன்றியம் ரகுநாதபுரம் ஏரியில் மண் கொட்டி சாலை அமைப்பதால், ஏரிக்கு நீர் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு பட்டாபிராமபுரம் ஏரியில் மண் எடுக்கப்பட்டது. அதிக ஆழம் மண் எடுப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து, மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
மண் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருத்தணி அடுத்த பீரக்குப்பம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் எக்ஸ்--ரே எடுக்க ஊழியரை நியமித்து, ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், திருத்தணி -- நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில், வி.கே.ஆர்.புரம் பகுதியில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.