/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர்கள் புகார் அளித்தாலும் அதிகாரிகள் அலட்சியம் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர்கள் புகார் அளித்தாலும் அதிகாரிகள் அலட்சியம்
நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர்கள் புகார் அளித்தாலும் அதிகாரிகள் அலட்சியம்
நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர்கள் புகார் அளித்தாலும் அதிகாரிகள் அலட்சியம்
நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர்கள் புகார் அளித்தாலும் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : மே 21, 2025 02:59 AM

திருவாலங்காடு,:சென்னை, பள்ளிக்கரணையில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, 23, என்பவர் லாரியில் சிக்கி உயிர்இழந்தார். இதையடுத்து, நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் வைக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருவள்ளூர் -- அரக்கோணம், தக்கோலம் -- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலைகளில் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.
சாலைகளில் வைக்கப்படும் பேனர்களால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது, திருவள்ளூர் ---- அரக்கோணம் நான்கு வழிச் சாலையில், திருவாலங்காடு ரவுண்டானாவில் ஐந்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பேனர்கள் விழுந்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அலட்சியம் காட்டுவதாக, வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.