/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பட்டாபிராமபுரத்தில் ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பட்டாபிராமபுரத்தில் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பட்டாபிராமபுரத்தில் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பட்டாபிராமபுரத்தில் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பட்டாபிராமபுரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 21, 2025 03:00 AM

திருத்தணி,:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பேருந்துநிறுத்தம் அருகே, மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம்,புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தீர்மானித்து, இரு நாட்களுக்கு முன் வாடகைக்கு கடை தேர்வு செய்து, மதுபாட்டில்கள் கொண்டு வந்து இறக்கியது.
நேற்று முன்தினம் பட்டாபிராமபுரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், 'டாஸ்மாக் கடை வேண்டாம்' என, திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர். இதனால், டாஸ்மாக் கடை திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நேற்று காலை பட்டாபிராமபுரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், புதிய டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்துதிருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது பெண்கள், 'எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. இக்கடையில் வைத்திருக்கும் மதுபாட்டில்களை உடனே எடுத்து செல்ல வேண்டும். இங்கிருந்து, 500 மீட்டர் துாரத்தில் தனியார் மகளிர் கலைக் கல்லுாரி மற்றும் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
'எனவே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என, போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கு, இன்ஸ்பெக்டர் மதியரசன், 'டாஸ்மாக் கடை திறக்கப்படாது. மதுபாட்டில்களையும் உடனே கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படும்' என்றார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.