/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 5 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி மாதாந்திர பராமரிப்பு சரியில்லை என புகார் 20 கிராம மக்கள் குற்றச்சாட்டு 5 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி மாதாந்திர பராமரிப்பு சரியில்லை என புகார் 20 கிராம மக்கள் குற்றச்சாட்டு
5 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி மாதாந்திர பராமரிப்பு சரியில்லை என புகார் 20 கிராம மக்கள் குற்றச்சாட்டு
5 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி மாதாந்திர பராமரிப்பு சரியில்லை என புகார் 20 கிராம மக்கள் குற்றச்சாட்டு
5 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி மாதாந்திர பராமரிப்பு சரியில்லை என புகார் 20 கிராம மக்கள் குற்றச்சாட்டு
ADDED : செப் 19, 2025 10:02 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாதாந்திர பராமரிப்பு பணியின் போது மின்வாரிய ஊழியர்கள் என்ன பணி செய்கின்றனர் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பம்கண்டிகை, மணவூர், தொழுதாவூர், சின்னம்மாபேட்டை ராஜபத்மாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, கடம்பத்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இங்கு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, மின் துறையினரால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 9:00 மணி வரை மழை நீடித்தது.
இரவு 11:05 மணிக்கு தான் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மரம் விழுந்து, ஒயர் டிரிப் ஆகிறது' என, காரணம் கூறினர்.
இதுகுறித்து, தொழுதாவூர் கிராம மக்கள் கூறியதாவது:
மழை வந்தாலே மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி என, கடந்த வாரம் புதன்கிழமை தான், காலை 9:00 - 5:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது, மரங்கள் வெட்டுவது போன்ற பணிகளை மின் ஊழியர்கள் செய்யவில்லையா? உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆற்றை கடந்து மின்சாரம் வருவதால் செஞ்சிபனப்பாக்கம், மணவூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்கிறது. துணைமின் நிலையம் அமைக்கும் பட்சத்தில், மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். - மின்வாரிய அதிகாரி, திருவாலங்காடு.