/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
ADDED : செப் 19, 2025 10:02 PM
மீஞ்சூர்:பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல் மின் நிலையம் --- 1 மற்றும் இரண்டில் உள்ள ஐந்து அலகுகளில், 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு, 1,200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று அவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனல்மின் நிலைய நுழைவாயில் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., அரசு, 2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மாதம், 30,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். அடையாள அட்டை தர வேண்டும். வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்.
மேலும், புயல், மழை, வெள்ளம், கொரோனா என, பேரிடர் காலங்களில், உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், அரசு அலட்சியமாக உள்ளது. எனவே, தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.