/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ யோகபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் யோகபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
யோகபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
யோகபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
யோகபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூன் 03, 2024 04:30 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்துார் கிராமத்தில் அமைந்துள்ள யோகாம்பாள் உடனுறை யோகபுரீஸ்வரர் கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாகசாலை பூஜை துவங்கியது.
தொடர்ந்து, நான்கு கால பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூலவரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை ஒட்டி, கிராம தேவதை கொள்ளாபுரியம்மனுக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு யோகபுரீஸ்வரர் உற்சவர் வீதியுலா எழுந்தருளினார்.